தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து பின் அரசியலில் களம் கண்டு வெற்றி பெற்றவர் ரோஜா.
ஆந்திர மாநிலம் நகரியில் கங்கை அம்மனை கொண்டாடும் ஜாத்திரை திருவிழா என்ற விழா நடைபெற்றது.
இதில் நடிகை ரோஜாவும் கலந்து கொண்டார், அம்மன் அலங்காரம் முடிந்து ஊர்வலம் செல்ல பூஜை நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ. என்ற முறையில் முதல் மரியாதை நடிகை ரோஜாவுக்கு அளிப்பது வழக்கம்.
ஆனால், தெலுங்குதேசம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கிராமபெரியவருக்கு தான் முதல்மரியாதை செய்ய வேண்டும் என்று கூறி தகராறு செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.இதில் கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ரோஜாவின் கையை கத்தியால் வெட்டி விட்டு ஓடிவிட்டார்.
இதை தொடர்ந்து அந்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவியது.இந்தநிலையில் ரோஜா மீதான தாக்குதலை கண்டித்து நகரி போலீஸ்நிலையம் முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.