நடிகை நஸ்ரியாவை மணந்தார் நடிகர் பஹத் பாசில்!

நடிகர் பஹத் பாஸிலுக்கும், நடிகை நஸ்ரியாவுக்கும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சிறப்பாக திருமணம் நடந்தது.

தமிழில், நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நசீம்.

nasreya-wedding

தமிழில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும் ஒன்றிரண்டு படங்களிலேயே தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். அதற்கு முக்கிய காரணம் அவரது துறுதுறு நடிப்பு தான்.

தமிழில் டாப் நடிகையாக உயர்ந்து வந்த இவருக்கும், பிரபல மலையாள இயக்குநர் பாசிலின் மகனும், வளர்ந்து வரும் முன்னணி நடிகருமான பஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது.

பிறகு இருவீட்டாரது சம்மதப்படி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமண நிச்சயமும், ஆகஸ்ட் 21ம் தேதி திருமணமும் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இவர்களது திருமணம், நேற்று (ஆகஸ்ட் 21ம் தேதி) திருவனந்தபுரத்தில் சிறப்பாக நடந்தது. இருவரும் இஸ்லாம் மதத்ததை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது மத வழக்கப்படி திருமண சடங்குகள் நடந்தன. இந்த திருமணத்தில் இருவீட்டாரது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஆகஸ்ட் 24ம் தேதி, ஆலப்புழாவில் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் தமிழ் மற்றும் மலையாளத்தை சேர்ந்த திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

திருமண வாழ்த்துக்கள் பஹத்-நஸ்ரியா!!

Related Posts