நடிகை குஷ்பு திமுகவிலிருந்து விலகினார்

திமுகவிலிருந்து நடிகை குஷ்பு விலகினார்.இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்திலேயே கழக உறுப்பினராக என்னை பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டேன்.

kushboo

ஆனால் என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே கழகத்திலிருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வேறு எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் பத்திரிகை நண்பர்கள் யாரும் தன்னை இப்போது தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் அவரது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

குஷ்புவின் விலகல், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts