நடிகைகளை பார்த்து பெண்கள் கவர்ச்சி உடை அணியவேண்டாம்

தமன்னா நடித்த ‘பாகுபலி’ படம் வசூலில் சாதனை நிகழ்த்தி உள்ளது. அவரது நடிப்புக்கும் பாராட்டுகள் குவிகின்றன. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அடுத்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Tamanna-1024x680

தமன்னா சமீபத்திய படங்களில் தூக்கலான கவர்ச்சியில் நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. தாராளமாக ஆடை குறைப்பு செய்வதாகவும் கூறப்படுகிறது. ‘பாகுபலி’ படத்தில் பாடல் காட்சியொன்றில் அரைநிர்வாண கோலத்தில் துணிச்சலாக அவர் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகைகள் போல் கவர்ச்சி உடை அணியும் மோகம் இளம்பெண்கள் மத்தியிலும் பரவி வருகிறது. இது தமன்னாவை வருத்தப்பட வைத்துள்ளது. சினிமாவில் நடிகைகள் அணிவது போன்ற உடைகளை சாதாரண குடும்பத்து பெண்கள் அணியக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

‘‘சினிமா வேறு. நிஜ வாழ்க்கை வேறு. இரண்டையும் கலக்க கூடாது. படங்களில் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கிறதோ, அதன் தன்மைக்கு ஏற்ப நடிகைகள் உடைகளை அணிகிறார்கள். விருப்பப்பட்டு அதுபோன்ற உடைகளை அவர்கள் உடுத்துவது இல்லை. சினிமாவில் நடிகைகள் அணிவது போன்ற ஆடைகளை குடும்பத்து பெண்கள் அணிய விரும்புவது நல்லது அல்ல.

நடிகைகள் யாரும் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியதும் சினிமாவில் உடுத்திய ஆடைகளை அணிவது இல்லை. சாதாரண குடும்ப பெண்கள் அணியும் ஆடைகளைத்தான் அணிகிறார்கள். நான் வீட்டில் இருக்கும்போது சாதாரண பெண் மாதிரிதான் இருப்பேன். சினிமாவில் அணிவது போன்ற ஆடைகளை உடுத்துவது இல்லை.

சினிமா உடைகளை அணிந்தால் வீட்டிலும் நடிக்கத்தான் வேண்டும். எனவே சினிமாவை சினிமா மாதிரி பாருங்கள். நிஜ வாழ்க்கைக்கு அதை கொண்டு வராதீர்கள். நடிகைகள் அணிவது போல் கவர்ச்சி ஆடைகளை உடுத்திக்கொள்ளவும் ஆசைப்படாதீர்கள்’’.

இவ்வாறு தமன்னா கூறினார்.

Related Posts