நடிகர் விஜய் தன் வாழ்க்கையில் கடந்து வந்த துயரமான நிகழ்வுகள்!

வெற்றிகள் ருசிப்பதும், மக்கள் மனதில் இடம் பிடிப்பதும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதிலும், திரைத்துறையில் இது மிகவும் கடினம் தான். ஒருவன் உயர, உயர அவனை முந்தி வெற்றிப் பெற நினைப்பவர்களை விட, அவனை கீழே தள்ளி தன்னிலையை உயர்த்திக் கொள்ள நினைப்பவர்கள் தான் அதிகம்.

viajy

இன்று சிம்மாசனத்தில் இருக்கும் பல நடிகர்கள் இதுப்போன்ற பாதைகளை கடந்து வந்தவர்கள் தான். அதில், நடிகர் விஜய் சற்று முன்னிலை வகிப்பவர். இன்று இளைய தளபதி, இதய தளபதி, அண்ணா என்று தங்கள் வீட்டு பிள்ளை போல ரசிகர்களால் ஒரே நாளில் இவர் கொண்டாடப்படவில்லை. இதற்கு பிறகு பல அவமானங்களும், துயர சம்பவங்களும் இருக்கின்றன. இதை, விஜய்யே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

தங்கை வித்யா!

எப்போதுமே அண்ணன் என்றால் தங்கை மீதும், அக்கா என்றால் தம்பி மீதும் அதீத பாசம் வைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட பெற்றோருக்கு அடுத்தப்படியாக இன்னொரு பெற்றோராக பாசத்தை பொழிபவர்கள் இவர்கள். விஜய்யும் அப்படி தான், தன் தங்கை வித்யா மீது அதீத பாசம் வைத்திருந்தார்.

திரையில் மட்டும் குரலை உசத்தும் விஜய். பேட்டிகளில், இயல்பு வாழ்க்கையில் அமைதியாக காணப்படுவார். ஆனால், ஒரு காலத்தில் கலகலப்பின் உச்சத்தில் இருந்தவர் விஜய். தங்கையின் மறைவு அவரது கலகலப்பையும் எடுத்து சென்றுவிட்டது.

தன் தங்கையின் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார் விஜய். இதன் மூலமாக பலருக்கும் உதவி செய்து வருகிறார். வித்யா எனும் பெயரில் யார் தன்னை பார்க்க வந்தாலும், மறுக்காமல் பார்க்கும் பழக்கத்தை இன்றளவும் பின்பற்றி வருகிறார் விஜய்.

வெற்றிக்கான பசி:

அப்பாவின் உதவியால் மேலே வந்தவர் என விஜயை வெறுப்பவர்கள் கூறலாம். அப்பாவின் இயக்கத்தில் சினிமாவில் தான் வந்தாரே தவிர. சினிமாவில் ஓர் நடிகனாக உயர, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நிறைய முயற்சிகள் எடுத்தார் விஜய்.

நடிகர் விஜய் வெளிநாடு சென்று நடிப்பு பயிற்சி பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஓர் பேட்டியில் விஜய்யின் தந்தை சந்திரசேகர் கூறியிருக்கிறார். சினிமாவில் எடுத்ததும் வெற்றியை ருசித்தவர் அல்ல விஜய். விஜயின் முதல் வெற்றி எனும் வகையில் பார்த்தால் அது, கோயம்புத்தூர் மாப்பிளை, பூவே உனக்காக என கூறலாம்.

திரை துறைக்கு வந்து நான்கு வருடங்கள் கழித்து தான் முழுமையான வெற்றியை ருசித்தார் நடிகர் விஜய். பூவே உனக்காக 250 நாட்கள் ஓடி விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் ஓர் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

மாஸ் இழந்த விஜய்:

யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். இதற்கு விஜய் மட்டும் விதிவிலக்கு அல்ல. திருமலையில் துவங்கி, தொடர்ந்து கில்லியாக வெற்றிகளை குவிக்க ஆரம்பித்து மாஸ் ஹீரோவாக பரிணாமம் அடைந்த விஜய்க்கு. அழகிய தமிழ் மகனில் தொடங்கி, சுறா வரை தொடர்ந்து ஐந்து தோல்வி படங்கள். அதிலும், 50வது படமான சுறா ரசிகர்களை பெரிதாக ஏமாற்றியது.

அரசியல் விளையாட்டுகள்:

தொடர் தோல்விகளை கடந்து, காவலனில் இருந்து வெற்றி பாதைக்கு திரும்பினார் விஜய். இங்கு தான் அரசியல் விளையாட்டுகளில் சிக்க ஆரம்பித்தார் விஜய். கமலுக்கு அடுத்து குறி வைத்து விஜய் படங்களுக்கு காரணமற்ற எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. தலைவா இதில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. “Time To Lead” எனும் துணை தலைப்பை குறி வைத்து இந்த படத்திற்கு சில எதிர்ப்புகள் எழுந்தன.

ரசிகர்களின் இதய தளபதி:

அனைத்துத் துயரங்களையும் கடந்து, தன் ரசிகர்களின் பலத்தால், துப்பாக்கியாக சீறி, கத்தியாக கூர்மையான பாய்ச்சலோடு தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் தெறி பேபி!

Related Posts