நடிகர் விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!

ஜல்லிக்கட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நடிகர் விஜய் தனது வீடியோ பதிவில்,

‛‛உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களின் கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கவே பறிப்பதற்காக அல்ல. தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதலும் இல்லாமல், எந்தவித கட்சி பேதமுமின்றி தமிழ் என்ற ஒரே உணர்வோடு, இப்போராட்டத்தில் குதித்திருக்கும் இளைஞர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். இதுசம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களை வெளியே அனுப்‛பீட்டா.. நான் சந்தோஷப்படுவேன். இவ்வளவுக்கும் காரணமான அமைப்பை வீட்டுக்கு அனுப்‛பீட்டா… தமிழ்நாடு சந்தோஷப்படும் எனத் தெரிவித்தார்.

அனுப்‛பீட்டா என்ற வார்த்தையை மிகவும் அழுத்தமாக உச்சரித்த விஜய், பீட்டா அமைப்புக்கு எதிராக தனது கருத்தை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

இது போல் நடிகர் விக்ரம், மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் தங்களது டூவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தனர். மேலும் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, ஜி.வி. பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் போராட்ட களத்திற்கே நேரில் சென்று தங்களது ஆதரவை பதிவு செய்திருந்தனர்.

வீடியோ பதிவை பார்வையிட

Related Posts