நடிகர் விஜய்யும் குமுதமும் சேர்ந்து நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் நாடகம் அம்பலம்

தமிழ் வார பத்திரிக்கை இதழான குமுதம் சென்ற வாரம் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உயிருடன் இருக்கும் வேளையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது.
குமுதத்தின் இந்த தீடீர் கருத்துக்கணிப்பிற்கு காரணம் என்ன என்பது சில நாட்கள் வரை தெரியாமல் இருந்து வந்தது. பின்னர் பணத்திற்காக தான் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளனர் என திரையுலக பிரபலங்கள் பலரும் கிசுகிசுத்தனர். தற்பொழுது இவர்கள் விஜய்யும் குமுதமும் சேர்ந்துதான் அடுத்த சூப்பர் ஸ்டார் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர் என்றும் அதில் தனக்கு தானே பட்டதையும் கொடுத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் என்றும் கூறுகின்றனர்.

kumutham-vijay

இந்த கருத்துக்கணிப்பு நடந்தபோது ஒவ்வொரு நாளும் நடிகர் அஜித் தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். கடைசி நாள் வரை நடிகர் அஜித் மட்டுமே அடுத்த சூப்பர் ஸ்டார் கருத்துகணிப்பில் முன்னிலை வகித்துள்ளார். இதற்கான ஆதாரத்தை கருத்துக்கணிப்பு நடத்திய நபர்களில் முக்கியமான ஒருவர் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகர் அஜித்தின் வெற்றி மறைக்கப்பட்டு நடிகர் விஜய் தான் வெற்றி பெற்றார் என அறிவித்துள்ளனர். இது எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்டு நடத்திய செயல் என்பதையும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அடுத்த நாள் விஜய் “ரசிகர்கள் என்னை அடுத்த சூப்பர் ஸ்டாராக தேர்வு செய்ததற்கு நன்றி, மக்களின் இந்த முடிவை நான் மனப்பூர்வமாக ஏற்றுகொள்கிறேன்” என குமுதம் பத்திரிக்கைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் கருத்துக்கணிப்பால் கொந்தளித்து போய் உள்ள ரஜினி ரசிகர்கள், இந்த விஷயத்தை கேட்டு மேலும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இது குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Posts