நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷன் விருது

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் டாக்டர் சாந்தா ஆகியோருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

rajini

2016-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு 112 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதற்கட்டமாக 56 பேருக்கு கடந்த மாதம் 28-ம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது.

விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு, விருதுகளை வழங்கினார். நடிகர் ரஜினிகாந்த், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் வி.சாந்தா ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். ரஜினிகாந்த் பாரம்பரிய உடையில் வந்து விருதை பெற்றுக்கொண்டார். விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா பத்ம பூஷண் விருது பெற்றார்.

Related Posts