நடிகர் பாலுஆனந்த் மாரடைப்பால் மரணம்

100 படங்களுக்கு மேல் நடித்தவரும், இயக்குநருமான பாலு ஆனந்த், மாரடைப்பால் காலமானார். விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ‛‛நானே ராஜா நானே மந்திரி சத்யராஜ் நடித்த ‛‛அண்ணாநகர் முதல் தெரு, ‛‛உனக்காக பிறந்தேன், ராஜாத்தி ராஜ ராஜமார்த்தாண்ட காத்தவராயன்; உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த்.

201606031009528076_Balu-Anand_SECVPF

கடைசியாக பவர் ஸ்டார் சீனிவாசனை வைத்து ‛ஆனந்த தொல்லை; என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப்படம் இன்னும் வெளிவரவில்லை.

இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் பல படங்களில் அசத்தியுள்ளார் பாலு ஆனந்த். வானத்தை போல, உன்னை நினைத்து, அன்பே சிவம், உனக்காக எல்லாம் உனக்காக உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

பாலு ஆனந்த்தின் சொந்த ஊர் கோவை மாவட்டம். கோவை காளம்பாளையத்தில் வசித்து வந்த பாலு ஆனந்த்திற்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பாதி வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. பாலு ஆனந்த்தின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரிலேயே நடக்கும் என தெரிகிறது.

பாலு ஆனந்த்தின் மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts