நடிகர் தனுசை நேரில் ஆஜராஜ நீதிமன்றம் உத்தரவு

மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தனர்.

அதில், தங்களுக்கு 3-வது மகனாக பிறந்த மகன் தனுஷ் என்றும், பதினொன்றாம் வகுப்பு பயின்ற போது அவர் சென்னைக்கு ஓடி விட்டதாக தெரிவித்து இருந்தனர்.

மேலும் அந்த மனுவில், “பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் திரைப்படத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டு அவரை பார்க்க முயற்சித்தோம், ஆனால் அவரை பார்க்க முடியவில்லை.

தற்போது உடல்நிலை சரியில்லாமலும் ஏழ்மை நிலையில் இருப்பதால் மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், ஜனவரி மாதம் 12 ஆம் தேதி திரைப்பட நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வழக்கு தொடர்ந்துள்ள கதிரேசன் சிவகங்கை அரசு போக்குவரத்து பனிமனையில் பணிபுரிந்து வருகிறார்.

Related Posts