நடிகர் சூரியாவின் அகரம் அறக்கட்டளை இலங்கையிலும் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளது!

தென்னிந்திய பிரபல நடிகர் சூரியாவின் அகரம் அறக்கட்டளை நிலையம் தனது பணிகளை இலங்கையிலும் விஸ்தரிக்கவுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தனது சேவையைத் தொடர்ந்து வரும் குறித்த நிறுவனத்தின் வருடாந்த ஒன்றுகூடல் தமிழ் நாட்டில் நடைபெற்றது.

இந்த ஒன்றுகூடலுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது இந்த அறக்கட்டளை அமைப்பின் பணிகளை இலங்கையிலும் விஸ்தரிப்பது தொடர்பாக அதன் நிர்வாகிகள் கல்வி இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதனையடுத்து, இது தொடர்பாக ஆராய்வதற்கு விரைவில் தமிழ்நாட்டிலிருந்து குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வருகைதரவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகரம் அறக்கட்டளை கடந்த 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் நாள் நடிகர் சூரியாவால் ஆரம்பிக்கப்பட்டதோடு, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசதியற்ற மாணவர்கள் இந்த அமைப்பின்மூலம் பயன்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts