நடிகர் சாய் சக்தி தற்கொலை முயற்சி

சமீப காலமாக சீரியல் நடிகர்களின் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் வாழ்வாதாரம் தான். குறைந்த சம்பளம், ஒரே தொலைக்காட்சியில் மட்டும் தான் வேலைப்பார்க்க வேண்டும் போன்ற கட்டுப்பாடு தான்.

sai-shakthy

இந்த வரிசையில் தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு அதிர்ச்சி ஆடியோ உலா வருகின்றது, இதில் பிரபல சீரியல் நடிகர் சாய் சக்தி தான் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

மேலும், ஒரே தொலைக்காட்சியில் நடித்து வந்தேன், அங்கிருந்து மற்றொரு தொலைக்காட்சியில் எனக்கு நிறைய வாய்ப்புக்கள் தருவதாக கூறி அழைத்தார்கள்.

என் மனநிலையை குழப்பி அங்கே வரவைத்தார்கள், ஆனால், தற்போது எனக்கு எந்த ஷோவும் அவர்கள் கொடுக்கவில்லை, மிகவும் மனமுடைந்து இருக்கிறேன், வாழ்க்கையில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி இதனால், தற்கொலை முடிவு கூட எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதை உடனே சின்னத்திரை சங்கத்தினர் கவணிக்க வேண்டும் என்பதே தற்போது எல்லோரின் எண்ணமும்.

Related Posts