சரத்குமார், விஜயகாந்த், சீமான், திருமாவளவன் ஆகியோர் தோல்வி!

முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், பெரியசாமி, பொன்முடி, வீரமணி ஆகியோர் தமிழக சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

vijay-seeman-kantha

இதேவேளை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளனர்.

திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியும் ஆர்கேநகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் வெற்றிபெற்றுள்ளனர்.

மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியிலும் திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கடலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

Related Posts