நடிகர் சங்கத்தில் ரஜினி கமலுக்கு முக்கிய பதவிகள்?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் விஷால் அணி வெற்றிபெற்றுள்ளது. தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விஷால் அணியை சேர்ந்த கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.

rajini_kamal

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த ராஜேஷ், ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, கோவை சரளா, பிரசன்னா, நந்தா, ரமணா, ஸ்ரீமன், பசுபதி, உதயா, பூச்சிமுருகன், சங்கீதா, சோனியா உள்பட 20 பேர் தேர்வாகியுள்ளார்கள்.

விரைவில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட உள்ள நிலையில், நடிகர் சங்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு முக்கிய பதவிகள் வழங்க புதிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

ரஜினிகாந்தை நடிகர் சங்கத்தின் கவுரவ தலைவராகவும், கமல்ஹாசனை கவுரவ ஆலோசகராகவும் நியமிக்கலாமா?, அல்லது இருவரையும் கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கலாமா? என்று நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Related Posts