நடமாடும் தகன மேடைகளை வாங்கி குவிக்கும் ரஷ்யா!

சீனாவிடம் இருந்து 21 நடமாடும் தகன மேடைகள் வாங்க ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

குறித்த தகன அறைகளை துருப்புகளுடன் சேர்ந்து அனுப்பி வைக்கவும், இதனால் பொதுமக்களிடமிருந்து ரஷ்யாவின் போர் இழப்புகளை மூடிமறைக்கும் முயற்சியில் புடின் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகன மேடைகளை கொண்டு உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல், களத்திலேயே தகனம் செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

மேலும், ரஷ்ய தயாரிப்பான நடமாடும் தகன அறைகளை ஏற்கனவே துருப்புகளுடன் அனுப்பி வைத்துள்ளதாகவும், 21 தகன அறைகளுக்கு சீனாவிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மிக விரைவில் அந்த தகன அறைகளை சீனா வழங்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் இது தொடர்பில் கவலை கொண்டுள்ளதாக தெகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை கொல்லப்பட்ட ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கையானது எதிர்வரும் மே 1ஆம் திகதி 220,000 என எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts