நடந்து முடிந்த போரானது தமிழ் மக்களுக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போரினால் தேடி வைத்த சொத்துக்கள், காணி, பூமி, வீடு, வாசல், நகை நட்டுக்கள், பொருள், பண்டங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் கல்வி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை யாழப்பாணக் கல்லூரியில் இடம்பெற்ற வடமாகாண 10 ஆவது விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனவே தமிழ் மக்கள் கல்விக்கு முதலிடம் கொடுத்து கல்வியை முறையாகப் பெற விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
வீதியில் கூடுவது, வெட்டிப் பேச்சுக்களில் ஈடுபடுவது அனைத்தையும் தவிர்த்து காலத்தை விரயமாக்காது, ஒழுக்கச் சீர்கேடு, துர்ப்பழக்கங்களை உடையவர்களின் சேர்க்கையை தவிர்த்து அவர்களைத் திருத்த முன்வர வேண்டும்.
அப்போது தான் மீண்டுமொரு முறை வளமான சமூகம் ஒன்று உருவாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.