நகுலேஸ்வர ஆலய தேர்த்திருவிழா!

நகுலேஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கடந்த 04 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவத்தின் சப்பறத் திருவிழா எதிர்வரும் 16 ஆம் திகதியும் தேர்த்திருவிழா 17 ஆம் திகதியும் அன்றைய தினமே மகா சிவராத்திரி நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் பண்ணிசைக் கச்சேரி, புராணப்படலம், இன்னிசைக் கச்சேரி, பஜனை, என்பனவும் இடம்பெறவுள்ளன. தொடர்ந்து 18 ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெற்று மகோற்சவம் நிறைவு பெறும்.

Related Posts