நகுலேஸ்வரம் வரை பஸ் சேவை நீடிப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து மாவிட்டபுரம் வரையில் இடம்பெற்று வந்த 769 ஆம் இலக்க பஸ் சேவையானது, நேற்று வெள்ளிக்கிழமை (04) முதல் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய முன்றல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கீரிமலை நகுலேஸ்வரத்தின் திருவிழா கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இனிவரும் நாட்களில் ஆலயத்தின் முக்கிய திருவிழாக்கள் நடைபெறவுள்ளமையால், ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்களின் நலன்கருதி பஸ் சேவை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதி சிவராத்திரி தினத்தையும் நோக்காகக் கொண்டு பஸ் சேவை நீடிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அனுமதி பெற்று இந்த பஸ் சேவையானது இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts