த.தே.ம முன்னணியின் கிளிநோச்சி மாவட்ட அமைப்பாளர் கைது

arrestதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 26ம் நாள் கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் கிராமத்தினை விடுவிக்கக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸவரனால் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஜெகதீஸ்வரன் நேற்றிரவு 10 மணியளவில் பரந்தனில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் 5 பேரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஜெகதீஸ்வரன் கிளிநொச்சி பொது வைத்திசாலையின் உத்தியோகத்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts