த.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு!

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி என்னும் திட்டத்தின் மூலம் திட்டப்பட்ட நிதியிலிருந்து தாயகத்தில் வாழும் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால், கௌதாரிமுனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டது.

Related Posts