த.தே.கூ. வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரான தம்பிராசாவின் வாகனம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களினால் நேற்று மாலை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் வேட்பாளரான தம்பிராசா சிறு காயங்களுக்கு உள்ளாகினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் ஒருவரின் ஆட்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

இதுபற்றி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும் முறையிடப்பட்டிருக்கின்றது

 

jaffna_20813_3

jaffna_20813_2

jaffna_20813_5

Related Posts