தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக்கட்சியை பிரிக்க அரசாங்கம் வியூகம் அமைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்த பலவாறாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது முடியாது எனும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியை பிரிப்பதற்கு தனது வியூகத்தை வகுத்து வருகின்றது எனவும் பா.அரியநேத்திரன் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.