தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்ட்டுள்ளதோடு கூட்டமைப்பின் கொறடாவாக த. சித்தார்த்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
குழுக்களின் செயலாளராக சிறிதரனும் பேச்சாளராக எம்.ஏ. சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தனுக்கு வழங்கப்படவேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அந்த நம்பிக்கையிலேயே பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைமை பதவியை தமது தரப்பு பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.