த.தே.கூ பிரதேச சபை உறுப்பினர் ஆளும் கட்சியில் இணைவு!

திருகோணமலை – சேருவில பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவலோகேஸ்வரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார்.

நேற்று (25) காலை இடம்பெற்ற சேருவில பிரதேச சபை மாதாந்த அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றியவாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் அருகில் அமர்ந்ததாக அறியமுடிகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக கே.சிவலோகேஸ்வரன் குறிப்பிட்டார்.

Related Posts