த.தே.கூ சுயலாபத்தைக் கருத்தில் கொண்டே செயற்படுகிறதாம்!

கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்கள் மக்களின் நல மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுவதே சிறந்த அரசியல் சாணக்கியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

minister nws -11.10.20142

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் நேற்றய தினம் (11) வடக்கு மாகாணத்திற்கு வெளியே பட்டதாரி ஆசிரிய நியமனங்களைக் கோரும் தமிழ்மொழி மூல பட்டதாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

உங்களுடைய நியமனங்கள் தொடர்பாக கொழும்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடியுள்ளேன். அதற்கான சந்தர்ப்பங்கள் வரும் வரையில் காத்திருக்க வேண்டும்.

எமது மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் முன்னேற்றம் காணும் அதேவேளை, சமூகத்தின் நற்பிரஜைகளாக அவர்களை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே எனது பிரதான நோக்காகும்.

minister nws -11.10.20141

இம் மாவட்டம் உள்ளிட்ட வடபகுதியின் அபிவிருத்தி மேம்பாட்டு செயற்திட்டங்களை அரசுடனான நல்லறவு மற்றும் இணக்க அரசியல் ஊடாக முன்னெடுத்து வருகின்றோம்.

இவை அனைத்தும் எமது சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மேற்கொண்டதும் இல்லை மேற்கொள்ளப் போவதுமில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

ஆனால், தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி தேர்தலில் வெற்றிபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயலாபத்தைக் கருத்தில் கொண்டே செயற்பட்டு வருகின்றனர் என்பதுடன், மக்களுக்காக எவ்விதமான செயற்திட்டங்களை முன்னெடுக்க கூட்டமைப்பினர் தயாராக இல்லை.

அந்தவகையில், கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்களை மக்களின் நலன்சார்ந்த அபிவிருத்தி மற்றும் முன்னேற்பாட்டு செயற்திட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு அவற்றை சரியான முறையிலும் உரிய நேரத்திலும் பயன்படுத்துவதே சிறந்த அரசியல் சாணக்கியம் என்பதுடன் அதையே நாம் இற்றைவரை முன்னெடுத்து வருகின்றோம், என்று தெரிவித்தார்.

Related Posts