தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக யாழ். வடமராட்சி பிரதேசத்தில் புதன்கிழமை (31) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
‘இரணைமடுவின் மேலதிக நீரை யாழ். மக்களுக்கு தரமாட்டோம் கடலில் விடுவோம்’ எனக்குறிப்பிட்டு இருவரது படங்களும் சேர்த்து இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
சுவரொட்டியின் கீழ் யாழ்.மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரணைமடுவின் வான் கதவுகள் கடந்த 22ஆம் திகதி திறக்கப்பட்ட போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களே சுவரொட்டியில் காணப்படுகின்றன.