த.தே.கூ ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல்!

attack-attackதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் நேற்று இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நேற்று பகல் ஒரு மணியளவில் மறவன்புலவில் வடமாகாண தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை ஹைஎயஸ் வாகனத்தில் வந்த 15 மேற்பட்ட இனந்தெரியாதோரால் எதிர்பாராத விதமாக இவர்கள் இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts