த.தே.கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் அறிமுகம்!

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முஸ்லிம் பிரதிநிதிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மேற்படி நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை யாழ். உஸ்மானிய கல்லூரி வீதியில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான, எம்.ஏ. சுமந்திரன், சீ.வீ.கே. சிவஞானம், ஜெயசேகரம் மற்றும் அ.அஸ்மின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

Related Posts