த.தே. கூட்டமைப்பின் கட்சிக் கொடிகள் நெல்லியடி பொலிஸாரால் அகற்றல்!

tnaதமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தேர்தல் விதிமுறைகளை மீறி மாலுசந்தி மைக்கல் மைதானத்தின் வீதியோரங்களில் தொங்கவிடப்பட்ட கொடிகள் நெல்லிடியடிப் பொலிஸாரினால் அகற்றப்பட்டன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகண சபை தேர்தலுக்கான பிரச்சார கூட்டமொன்றினை வடமராட்சி மாலுசந்தி மைக்கல் மைதானத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்தன.

இந்த கூட்டத்திற்காக வீதியோரங்களில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. கொடிகள் பறக்கவிடப்படுத்தல் தேர்தல் விதிமுறைகளினை மீறிய செயற்பாடு என்பதால் அகற்றுமாறு ஏற்பாட்டாளர்களுக்கு நெல்லியடி பொலிஸார் அறிவித்தனர்.

எனினும் ஏற்பாட்டாளர்கள் குறித்த கொடிகளினை அகற்றாமையினால் நெல்லியடி பொலிஸாரினால் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts