த.தே.கூட்டமைப்பினருக்கான அன்பான வேண்டுகோள்! – இரா. தேசப்பிரியன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கோப்புகளில் துண்டுபிரசுரமொன்று வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) காலை கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபையின் உறுப்பினர்களுக்கு மட்டும் வைக்கப்பட்ட கோப்புக்களில் ‘இரா. தேசப்பிரியன், வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றியம், சமூக ஒற்றுமைக்கான மக்கள் பேரவை’யினால் உரிமை கோரப்பட்ட இந்த துண்டுப் பிரசுரத்தில் ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கான அன்பான வேண்டுகோள்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி துண்டுப்பிரசுரத்தில் ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்து முரண்பாடுகளை கலைத்து விட்டுக்கொடுப்புடனும் அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையாகவும் செயற்பட வேண்டுமென்றும் அவ்வாறு செய்யாவிடின் அடுத்துவரும் தேர்தல்களில் தர்ம சங்கடமான நிலைமைகளை தோற்றுவிக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடக்கத்தது.

TNA-notes-north

Related Posts