த்ரிஷா, ஹன்சிகா தொலைபேசியை ஊடுருவிய ‘ஹேக்கர்ஸ்’

மொபைல் போன்களை ‘ஹேக்’ செய்ய முடியுமா என்று சிலருக்குக் கேள்வி இருக்கும். எப்படி சில வைரஸ் இணையதளங்கள் மூலம் நம்முடைய கம்ப்யூட்டர்களுக்குள் வைரஸ் வருமோ, அதே போல தேவையற்ற மெசேஜ்கள், இணையதளங்கள் மூலமும் வைரஸ்களை அனுப்ப முடியும்.

அப்படித்தான் த்ரிஷா, ஹன்சிகா ஆகியோரது மொபைல் எண்களைத் தெரிந்து வைத்துள்ள யாரோ, அவர்கள் மொபைலுக்கு வைரஸ்களை அனுப்பி ஹேக் செய்துள்ளனர். அதோடு, அந்த மொபைல் போனில் அவர்கள் சேர்த்து வைத்துள்ள எண்கள், ஃபோல்டர்கள் அனைத்தையும் அழித்து மொபைல் போனை ‘சுத்தப்படுத்தி’ விட்டனர்.

இது பற்றி, த்ரிஷா தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். “என்னுடைய நம்பர் தெரிந்த நண்பர்களே, உங்களது எண்களை வாட்ஸ்அப் மூலம் எனக்கு அனுப்பி வையுங்கள். வேலையில்லாத ஒரு கோழை என்னுடைய போனை, துடைத்து, சுத்தம் செய்து வைத்துள்ளான்,” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் இது பற்றி டிவீட் செய்த சிறிது நேரத்தில் ஹன்சிகாவும், “எனக்கும் அப்படித்தான் நடந்துள்ளது. நண்பர்களே, உங்களது நம்பர்களை அனுப்பி வையுங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த ‘சுத்தமான’ வேலையை செய்தது?.

Related Posts