த்ரிஷாவின் நிறைவேறாத சினிமா ஆசை!

சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமாகி பின்னர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா, அதன்பின்னர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அநேக ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நம்பர்-1 இடத்தை பிடித்த த்ரிஷா, பல புதுமுக நடிகைகளின் வரவு வந்த பின்னரும் இப்போதும் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

trisha

இந்நிலையில் த்ரிஷா இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடித்து வந்தாலும் அவருக்குள்ளும் ஒரு வருத்தம் நீண்டகாலமாகவே குடி கொண்டிருக்கிறது. அதாவது, இவ்வளவு ஆண்டு ஆன பின்னும் தன்னால் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர முடியவில்லையே என்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்.

மேலும் தனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையே கிடையாது என்றும் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவிற்கு வந்துவிட்டதாகவும், இவ்வளவு ஆண்டுகள் நான் சினிமாவில் நீடிக்கிறேன் என்றால் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன் என்றும், இன்றைய நடிகர்களில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்து வருவதாகவும், அவர்களுடன் இணைந்து நடிக்க ஆசை என்றும் கூறியிருக்கிறார் த்ரிஷா.

Related Posts