தோல்வி குறித்து தோனி சொல்வது என்ன?

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 3 வீரர்களின் சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்றதுடன் தொடரையும் சொந்தமாக்கி வரலாறு படைத்தது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,

dhonis

‘இது பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தது. எங்களது வேகப்பந்து வீச்சாளர்களால் அதிகமாக ‘பவுன்ஸ்’ செய்ய முடியவில்லை. சுழலுக்கும் கைகொடுக்கவில்லை. வான்கடே ஆடுகளம் பற்றி எங்களுக்கு நன்கு தெரியும். பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காது என்பது அதிகமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இந்த ஒரு ஆட்டத்தில் மட்டுமே மோசமாக தோற்று இருக்கிறோம். பவுலிங்கில் கடைசி 25 ஓவர்களில் ஆட்டம் கட்டுப்பாட்டை விட்டு போய் விட்டது. யாராவது ஒரு பேட்ஸ்மேன் 150 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே, இது போன்ற ஸ்கோரை எட்ட வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

Related Posts