தோல்வியை ஏற்று அலரி மாளிகையை விட்டுச் சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related Posts