தோல்வியின் எதிரொலி தலைமைப் பதவியைத் துறந்தார் மலிங்க!

இலங்கை ருவென்ரி -20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து லசித் மலிங்க விலகியுள்ளார்.

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி கண்டதன் எதிரொலியாகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

எனினும் ருவென்ரி-20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் நேரத்தில் அவர் தனது தலைமைப் பதவியை ராஜிநாமா செய்திருப்பதால் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

மலிங்க விலகியதால் ஒருநாள் அணியின் தலைவர் மத்தியூஸ் தலைமையில் ருவென்ரி -20 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணி களமிறங்கும் எனத் தெரிகின்றது.

Related Posts