தோற்றுப் போனார் ஓ.பி.எஸ்! வெறும் கையுடன் சென்னை புறப்பட்டார்

அலங்காநல்லூர் கிராம மக்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாலும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் சென்னை திரும்புகிறார்.

மதுரையில் இருந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட அவர் எதுவும் பலன் தராமல் போனதால் சென்னை புறப்பட்டார். ஜல்லிக்கட்டு இன்று நடைபெறும். வாடி வாசல் திறக்கும், காளைகள் துள்ளிக் குதித்து வரும் என்று கூறியிருந்தார் முதல்வர். ஆனால் அலங்காநல்லூர் மக்கள் அதற்குத் தடை போட்டு விட்டனர்.

அவசரச் சட்டம் கண் துடைப்பு, ஏற்க மாட்டோம், நிரந்தரச் சட்டத்துடன் வாங்க, அதுவரை வராதீங்க என்று கூறி விட்டனர். நாலாபக்கமும் அலங்காநல்லூரைச் சுற்றிலும் மக்கள் குவிந்திருக்கின்றனர். கொந்தளிப்புடன் உள்ளனர்.

சமரச முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய் விட்டன. ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களை நேரில் அழைத்துப் பேசியும் கூட எதுவும் பலன் தரவில்லை. இதையடுத்து மீண்டும் சென்னை திரும்ப முதல்வர் முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் மதுரை விமான நிலையம் விரைந்த அவர் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டார். ஜல்லிக்கட்டு நடத்தப்படும், நானே தொடங்கி வைப்பேன் என்று கூறிய முதல்வரால் அதை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. வெறும் கையுடன் தற்போது சென்னை திரும்புகிறார்.

Related Posts