ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்ற போதிலும் தனது ஆட்சிக்காலத்தின் எஞ்சிய இரண்டு வருடங்களையும் பூர்த்தி செய்யப்போவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எனினும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இலங்கை தசாப்தகாலங்களில் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளது.
எனக்கு ஐந்து வருடத்திற்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது நான் மீண்டும் போட்டியிட மாட்டேன் என அவர் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வழங்கிய போட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்த பேட்டியில் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு.
நாங்கள் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருந்துவிட்டோம்,ஆறு மாதங்களிற்கு முன்னர் அவர்களின் உதவியை நாடியிருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம்.
நாங்கள் நிதி சட்ட ஆலோசகர்களை நியமித்துள்ளோம்(கடன்கள் தொடர்பாக)அது மூலதன சந்தை தொடர்பானது ஆனால் ஒவ்வொரு நாட்டையும் தனித்தனியாக அணுகவேண்டியுள்ளது,எங்களிற்கு முக்கியமாக கடன் வழங்குபவர்கள் இந்தியா சீனா ஜப்பான் பாரிஸ்கழகம்.
நான் இந்தியா சீனாவிடமிருந்து உதவிகளை கோரியுள்ளேன்,நான் நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன், கடிதம் எழுதியுள்ளேன்,அதன் பின்னர் நான் மத்திய கிழக்கு தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன், கட்டார் குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி ஓமான் தலைவர்களுடன் நீண்டகால எண்ணெய் ஒப்பந்தத்தை பெறுவதற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விரும்புகின்றேன்.
மானியம் வழங்கும் முறையை நீக்கவேண்டும், அரசாங்க ஊழியர்களை அல்லது இராணுவத்தினரை குறைக்க முடியாது ஆனால் ஆட்சேர்ப்பை குறைக்கலாம்.
தோற்றுப்போன ஜனாதிபதியாக நான் போக முடியாது-எனக்கு ஐந்து வருடத்திற்கான மக்கள் ஆணை உள்ளது,நான் மீண்டும் போட்டியிடமாட்டேன்.
ஜனாதிபதி என்பது அரசியல் என்பது உங்களிற்கு தெரியும் . நான் அரசியல்வாதியில்லை, அதிஸ்டவசமாகவோ அல்லது துரதிஸ்டவசமாகவோ அரசியலில் நீண்டகாலமிருக்கும்போது உங்களிடம் கனமான பொதிகள் இருக்கும், நிறைய நண்பர்கள்,உங்களிடமிருந்து உதவியை பெற விரும்பும் பலர் உங்கள் ஆதரவாளர்களாக காணப்படுவார்கள், நீங்கள் இதற்கு எதிராக செயற்பட்டால் அவர்களின் ஆதரவு உங்களிற்கு கிடைக்காது – நான் இதற்கு எதிராக செயற்பட்டேன், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் என்ன? ஜனாதிபதியாகயிருந்தால் அவருக்கு முழுமையான அதிகாரம் இருக்கவேண்டும் என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயம்,இல்லாவிட்டால் அதனை நீக்கிவிட்டு முழுமையான வெஸ்ட்மினிஸ்டர் முறைக்கு செல்லுங்கள்.