தோனி அதிரடி: ஹீரோஸ் லெவன் வெற்றி

சேவை நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்கான டி-20 கிரிக்கெட் போட்டியில் மகேந்திர சிங் தோனி அதிரடியில் ஹீரோஸ் லெவன் அணி வெற்றி பெற்றது.

ms-dhoni_m

பிரிட்டன் ராணுவச் சேவை அமைப்பு ஒன்று நோயாளிகள், காயமடைந்தவர்கள், படுகாயமடைந்த பிரிட்டன் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சேவையாற்றி வருகிறது. இந்த அமைப்புக்கு நிதி திரட்டும் வகையில் சர்வதேச பிரபல முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் டி-20 போட்டியை லண்டனில் நடத்தினர். ரூ.4.5 கோடி நிதி திரட்டுவது இப்போட்டியின் நோக்கமாகும்.

இதில் பிரென்டன் மெக்கல்லம் தலைமையிலான உலக லெவன் அணியில் பிரையன் லாரா, மேத்யூ ஹேடன், கிரீம் ஸ்மித், மஹேலா ஜெயவர்தனே உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஆண்ட்ரூ ஸ்டிராஸ் தலைமையிலான ஹீரோஸ் லெவன் அணியில் வீரேந்திர சேவாக், மகேந்திர சிங் தோனி, அஸார் மஹ்மூத், ஹெர்ஷெல்லி கிப்ஸ், டேமியன் மார்ட்டின் ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த உலக லெவன் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜெயவர்தனே 48 ரன்களும், ஹேடன் 34 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து ஆடிய ஹீரோஸ் லெவன் அணி, 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய தோனி பவுண்டரி, சிக்ஸர்கள் என விளாசி 3 பந்துகளை மீதம் வைத்து ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார். தோனி 38 ரன்களும் (22 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர்), சேவாக் 30 ரன்களும் (25 பந்து, 4 பவுண்டரி) விளாசினர். ஆட்ட நாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.

cricket-for-heroes-help-for-heroes-rest-of-the-world-xi-the-oval_3352325

Capture

Related Posts