தோனியின் முதல் போஸ்டர் வெளியீடு!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில், எம்.எஸ்.தோனி என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்பட், தோனியாக நடிக்க இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.

sushant-singh-ms-dhoni-movie-poster-1-350x273

இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெரிய ஸ்டேடியத்தில், தோனி கையில் பேட்டோடு நிற்பது போன்றும், தோனியின் லக்கி நம்பரான 7 என்ற எண்ணோடு அவர் அணிந்த டீசர்ட்டுடனும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளன.

தோனி வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவர் எப்படி இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்தார் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தப்படத்தில் சொல்லப்பட இருக்கிறது. முன்னதாக தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க பிசிசிஐ., அனுமதி மறுத்து, பின்னர் சம்மதம் சொன்னது குறிப்பிடத்தக்கது.

Related Posts