தோட்டத்தில் கொய்யா பறித்த 2 பொலீசார் பணிநீக்கம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பண்ணை வீடு லாகூர் அருகே உள் ராய்விந்தில் உள்ளது.

guava-koyala

ஜதி உம்ரா என்ற அந்த வீட்டு தோட்டத்தில் கொய்யா மரங்கள் உள்ளன. இந்நிலையில் 2 கான்ஸ்டபிள்கள் அந்த தோட்டத்தில் கொய்யாப்பழம் பறித்துள்ளனர். இதையடுத்து பழம் பறித்த குற்றத்திற்காக அவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் ஷெரீஃபின் தோட்டத்தில் இருந்த சில மயில்களை ஒரு பூனை கொன்றுவிட்டது. அந்த பூனை மயில்களை கொல்வதை தடுக்காமல் இருந்ததற்காக 27 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மயில்களை பாதுகாக்க நியமிக்கப்பட்ட அவர்கள் பூனை அவற்றை கொல்லும்போது தூங்கியுள்ளனர். ஷெரீஃபின் பண்ணை வீடு 400 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த வீட்டை பாதுகாக்கும் பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts