யாழ். மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையால் தொழில் முயற்சியாளருக்கான தொழில்நுட்ப மாற்றுப் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயிற்சியில் தோற்பொருள் உற்பத்திகள், கன்னார் உற்பத்திப் பொருட்கள், கழிவு துணிகளிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள், பழச்சாற்றிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள், பாலிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள், கடலுணவு பதனிடுதல், காளான் வளர்ப்பு முதலான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
மேற்குறிப்பிட்ட பயிற்சிகள், கடந்த இரண்டு மாதங்களாக கட்டம் கட்டமாக இடம்பெற்று வருவதாகவும், தற்போது இணைந்து கொள்ள விரும்புபவர்கள், யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபை கட்டடத்தில் இயங்கி வரும் கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் தொடர்பு கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.