Ad Widget

தொழில் நிறுவனங்களுடனான கலந்துரையாடல்

தொழில் நிறுவனங்களின் சமூக தொடர்பாடலையும் கூட்டுறவையும் விருத்தி செய்வதற்கான கலந்துரையாடல், வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் தொழிற்துறை திணைக்கள அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை (07) இடம்பெற்றது.

kanakeswaran

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் கூறியதாவது,

தொழில்தருநர்கள் மற்றும் தொழிலாளர்களை இணைத்து ஒரு நிறுவனத்தில் முரண்பாடுகள் அற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு எவ்வாறு சமூக தொடர்பாடல், கூட்டுறவு பயன்படும் என்பது தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடைபெறுகின்றது.

யாழ். நகர பகுதியில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டமைந்த முக்கியமான நிறுவனங்களின் முதலாளிகளையும் தொழிலாளர்களையும் இந்த கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தோம்.

சமூக பங்காளர்களிடையே தொடர்பாடல் கருத்துக்களுக்கு செவிமடுத்தல், ஒன்றுபட்ட தீர்மானங்களை எடுத்தல், கைத்தொழிலில் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுதல் போன்ற விரிவுரைகளை இதன்போது வழங்கியிருந்தோம்.

இக்கருத்தரங்கின் முக்கியமான நோக்கம், ஒரு நிறுவனத்திலுள்ள இரண்டு தரப்பினரையும் சுமூகமான அமைதியான நிலைக்கு கொண்டுவந்து கைத்தொழிலில் அமைதியான நிலைமை எற்படுத்துவது ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts