தொழில் நாடுவோரை பதிவு செய்யுமாறு கோரிக்கை!

யாழ்.பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழில் நாடுவோர் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரையில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் அலுவலகங்களிலும் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்.மாவட்ட செயலக தொழில் நிலையம் ,பிரதேச செயலகங்களுடன் இணைந்து தொழில் நாடும் இளையோருக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் பிரதேச செயலக ரீதியாக பதிவுகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை யாழ்.பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தொழில் நாடுபவர்களின் பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தொழில் நாடுவோர் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

Related Posts