தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் தகவல் தொடர்பாடல் நிலையங்களை பின்தங்கிய கிராமங்களில் நிறுவ திட்டம்

it centresதொழில்நுட்ப வளர்ச்சியில் பின்தங்கிய கிராமங்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் பொருட்டு, யாழ்ப்பாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையங்களை நிறுவுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் நடைமுறைப்படுத்துகின்றது. இதனூடாக யாழ்.மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் தொழில்நுட்பத்தில் பின்தங்கிய கிராம சேவையாளர் பிரிவுகள் இனங்காணப்பட்டுள்ளன.

குறித்த கிராமத்திலுள்ள திறம்பட செயற்படும் கிராம மட்ட அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக கணினி உபகரணங்கள் என்பன குறித்த கிராமமட்ட அமைப்புக்கு வழங்கப்படும்.

அத்துடன் ஒரு வருடத்துக்கான இணையக்கட்டணம் இலவசமாக வழங்கப்பட்டு அதன் பின்னர் குறித்த கிராம மட்ட அமைப்புக்களே இதற்கான பணத்தை செலுத்த வேண்டும்.
யாழ்.மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் ஊர்காவற்றுறை (ஜே/49) கிராம அலுவலர் பிரிவும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் அராலி தெற்கு(ஜே/ 162) கிராம அலுவலர் பிரிவும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் பண்டத்தரிப்பு (ஜே/146) கிராம அலுவலர் பிரிவும், இளவாலை (ஜே/155) கிராம அலுவலர் பிரிவும் ,தெல்லிப்பழை பிரதேச செயலர் தந்தை செல்வாபுரம் (ஜே/230) கிராம அலுவலர் பிரிவும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் சுன்னாகம் தெற்கு (ஜே/196) கிராம அலுவலர் பிரிவும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் நீர்வேலி தெற்கு(ஜே/268) கிராம அலுவலர் பிரிவும், அச்சுவேலி வடக்கு (ஜே/285) கிராம அலுவலர் பிரிவும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் உடுப்பிட்டி வடக்கு (ஜே/ 353) கிராம அலுவலர் பிரிவும்

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் பருத்தித்துறை கிராம அலுவலர் பிரிவும் (ஜே/401) , சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் கொடிகாமம் மத்தி(ஜே/327), வரணி இயற்றாலை (ஜே/343) சாவகச்சேரி நகரம் (ஜே/300) கிராம அலுவலர் பிரிவும்
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் திருநெல்வேலி மத்தி வடக்கு (ஜே/114), கோண்டாவில் மத்தி கிழக்கு (ஜே/118) கிராம அலுவலர் பிரிவும், யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் றெக்கிளமேசன் மேற்கு (ஜே/69) , மூர் வீதி வடக்கு (ஜே/87) கிராம அலுவலர் பிரிவும்

வேலணை பிரதேச செயலர் பிரிவில் அல்லைப்பிட்டி (ஜே/10) கிராம அலுவலர் பிரிவும், நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் நெடுந்தீவு மத்தி மேற்கு (ஜே/3) கிராம அலுவலர் பிரிவும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் காரை கிழக்கு (ஜே/48) கிராம அலுவலர் பிரிவும் முதல் கட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts