தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான சட்ட அமுல்படுத்தலில் ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ஐரோப்பிய ஆசிய தொழில் கூட்டுறவு மாநாடு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 3 திகதி வரை சீனாவில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். இலங்கை தொழில் திணைக்களத்தில் இருந்து 6 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டோம்.
கலந்துகொண்ட ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளும் தமது நாட்டின் தொழில் திணைக்கள திட்டங்கள் தொடர்பான சட்டங்கள், கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் பெறுபேற்றில் தொழிலாளர்களில் சமூக பாதுகாப்பு திட்டம், வேலை உரிமைகள், தொழிலாளர் பாதுகாப்பு போன்ற விடயங்களில் மற்றைய நாடுகளை விட இலங்கை முன்னணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்தார்.