தொழிற் சங்க நடவடிக்கைக்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் அச்சுறுத்தல்

teachers-unionவட மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவைகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாமையினால் தொழிற் சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு, மடு, துணுக்காய், கிளிநொச்சி, வவுனியா வடக்கு உட்பட்ட வட மாகாண ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளங்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அந்தவகையில், 2005 முதல் 2011 வரையிலான காலப் பகுதியில், சம்பள நிலுவைகள் மற்றும் பதவியுயர்வுகள் வழங்கப்படாது, வட மாகாண கல்வி அமைச்சினால் 2005/4, 2008/45, 2006/6, அதன் பின்னர் 2011/30, 2009/25 என பல சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சம்பள நிலுவைகள் மற்றும் பதவியுயர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

வட மாகாண ஆசிரியர்களுக்கு பல லட்சம் ரூபா சம்பள நிலுவைகள் வழங்க வேண்டியுள்ளன. சம்பள நிலுவைகள் மற்றும் பதவியுயர்வுகள் சம்பந்தமாக வடமாகாண கல்வி அமைச்சோ, 12 வலய கல்வி அலுவலகங்களோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதனால், கடனுதவிகள், சம்பள உயர்வுகள் இல்லாமையினால், இதனால் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில், வட மாகாண கல்வி அமைச்சினால் ஆசிரியர்களுக்கான நிலுவைச் சம்பளங்கள் மற்றும் பதவியுயர்வுகனை மேற்கொள்வதற்கான செயற்த்திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts