தொலைவிலிருக்கும் காதலர்களுக்கு உதவும் உபகரணம்

ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு ‘ஸ்கைப்’ போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் அன்புக்குரியவர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளது.

hand-shaking-computer-2

இந்நிலையில் நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘பிரெப்பிள்ஸ்’ என அழைக்கப்படும் தொலை தூரத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தொடுகை உணர்வைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்கியுள்ளனர்.

hand-shaking-computer

கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் செயற்படும் இந்த உபகரணம் ஒருவர் தனது அன்புக்குரியவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரது கரத்தைப் பற்றி அன்பை வெளிப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.

Related Posts