தேசிய அரசாங்கம் அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துவிட்டது. வற் வரி 15 வீதமாக அதிகரிக்கப்படுவதன் காரணமாக தொலைபேசி கட்டணங்களும் தனியார் மருத்துவ ஆலோசனை சேவை கட்டணங்களும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளன.
இதன்மூலம் சாதாரண மக்களே பாரியளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.