தொலைபேசி ஒட்டுக் கேட்பு: கூல்சனுக்கு 18 மாத சிறை

பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியராக இருந்து, பின்னாளில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரனின் தலைமை ஆலோசகராக இருந்த அண்டி கூல்சனுக்கு, தொலைபேசிகளை ஒட்டுகேட்ட குற்றத்துக்காக 18 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

andy_coulson

நியூஸ் ஒஃப் த வோர்ல்ட் என்ற செய்தித்தாளின் ஆசிரியராக இருந்த சமயத்தில், பல பேருடைய தொலைபேசி செய்தி பதிவுகளான வாய்ஸ்மெயில்களை முறைகேடாக ஒட்டுக்கேட்க திட்டம் வகுத்ததாக கூல்சன் மீது சென்ற வாரம் நீதிமன்றம் குற்றத்தை உறுதிசெய்திருந்தது.

பத்திரிகைக்கு சுவாரஸ்யமான செய்தியை தேட வேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினர், பிரலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் போன்றோர்களது தொலைபேசிகள் கூல்சனின் திட்டத்தின் கீழ் ஒட்டுக்கேட்கப்பட்டிருந்தன.

இந்த விவகாரம் வெளியில் வந்ததை அடுத்து அந்தப் பத்திரிகை மூடப்பட்டிருந்தது.

Related Posts