தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் படம் மற்றும் பாடல்கள் வைத்திருந்த இளைஞன் கைது!

வடமராட்சி கிழக்கு பூனைத்தொடுவாய் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 125 கிலோ கஞ்சாவை காட்டிக் கொடுத்த இளைஞன் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும், பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி பூனைத்தொடுவாய் பகுதியில் 125 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு இளைஞா் ஒருவா் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளாா். இதனடிப்படையில் பொலிஸாா் மற்றும் இராணுவத்தினா் குறித்த பகுதியை முற்றுகையிட்டு

சோதனை நடாத்தியபோது மறைத்துவைக்கப்பட்டிருந்த 125 கிலோ கஞ்சா மீட்க்கப்பட்டது. இதனை குறித்த இளைஞன் புகைப்படம் எடுத்த நிலையில் அவருடைய கைத்தொலைபேசியை பறித்த இராணுவத்தினா் அதில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்கள் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் பாடல்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டி குறித்த இளைஞனை கைது செய்து பளை பொலிஸாிடம் ஒப்படைத்துள்ளனா்.

Related Posts